மட்டக்களப்பு

இழுபறிக்கு இன்று தீர்வு கிட்டுமா?

(எருவில் துசி) ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 16...

இளைஞர்களுக்கான தொழில் சேவை மத்திய நிலையம் திறப்பு.

  (எருவில் துசி) போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினை இலகுபடுத்தம் நோக்கில் திறந்து வைக்கப்பட்டது. அதாவது மாபெரும் தொழில் சந்தையினை ஏற்படுத்தும் முகமாக...

18029 ஏக்கர் நெற் செய்கைக்கு தயாராகும் பட்டிப்பளை பிரதேசம்

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 18029 ஏக்கரில் 2019/2020 பெரும்போக விவசாய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பக்கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி...

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு.

  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்...

ஜனாதிபதி வேட்பாளருடனும் நாம் பேசத்தயார் எம்.எ.சுமத்திரன்.

  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரையும் ஆதரிக்கும் விடயத்தில் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும் என்று...

தேரோடிய தலத்தில் இன்று ஏரோட்டம்.

தேரோடிய தலத்தில் இன்று (17) ஏரோட்டம் இடம்பெற்றது. (வீடியோ இணைப்பு) https://m.facebook.com/story.php?story_fbid=2631782026866336&id=100001036928339 வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் தேரோட்டம் நிறைவுற்று இன்று (17) ஏர் பூட்டும் நிகழ்வு ஆலய பரிபாலன சபையினரால் நிகழ்த்தப்பட்டது. விழாக்குழு தலைவர் க.சிவகுருநாதன்...

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரத்தில் நேற்று நடந்த அற்புதம்.

தேரோட்ட பெருவிழாவில் கடவுளைக் கண்டேன்! கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் தேரோட்ட பெருவிழா நடைபெற்றது. 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த போதிலும் இயற்கையின் காரணமாக, மழை அதிகமாக பெய்துகொண்டிருந்தது. இதனால் 4 மணிக்கு...

யானை தாக்கி மீனவர் மரணம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாமுனைகல் பகுதியில் யானை தாக்கிய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் குடாமுனைக்கல் கிராமத்தைச் சேர்ந்த சீனித்தம்பி கனகசூரியம் (வயது 59) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே காட்டு யானையின் தாக்குதலுக்கு...

தேரோட்ட நிகழ்வுகள்

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரப் பெருமானது ஆலயத்தில் தேரோட்ட. நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது. மழை பெய்த போதும் அடியார்களின் அரோகரா என்ற கோசம் நிறைந்து நிற்க எம்பெருமான் தேர் வலம் வந்தது.

தான்தோன்றியப்பனின் தேரிழுக்கும் வடம் பூட்ட கயிறு எடுக்கின்ற நிகழ்வு

தான்தோன்றீஸ்வரப் பெருமானது தேரினை இழுப்பதற்கான வடம் பூட்டுவதற்காக கயிறு ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்படுகின்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.