களுவாஞ்சிக்குடியின் முதலாவது சட்டப்பட்டதாரி செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -LLB.,J.P.  

0
763

செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா -LLB.,J.P.

————————————————————————————————-

சட்டத்தரணி சு.ஸ்ரீகந்தராசா அவர்கள், இளமையில் இருந்தே சிறந்த சமூகசேவையாளராகவும், பன்முகக் கலைஞராகவும் திகழ்ந்ததொரு தமிழ் ஆர்வலராக விளங்குபவர். தனது பதினெட்டாவது வயதில் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் இணைந்த அவர், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு ஆகிய இடங்களில் பதின்மூன்று வருடங்கள் பணியாற்றியவர்.

அரசாங்க சேவையில் இருந்தபோதே கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாகச ;சட்டம் படித்து, சட்டபப்ட்டதாரியாகி, உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் எடுத்தவுடன ;எழுதுவினைஞர் பதவியைத் துறந்துவிடடு;, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை. கொழும்பு நீதிமன்றங்களில் சட்டத்தரணியாகத் திறம்படத் தொழில் புரிந்தவர்.

களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகனாக 1953 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி பிறந்த அவர் களுவாஞ்சிக்குடியின் முதலாவது சட்டபப்ட்டதாரியாவார்.

கல்விகற்ற பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும்

மட்ஃபட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், களுவாஞ்சிகுடி. மட்ஃஅரசினர் கல்லூரி (இந்துகக்ல்லூரி), மட்டக்களப்பு. கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo) இலங்கைச் சட்டக்கல்லூரி (Sri Lanka Law College) மெல்பேண் பல்கலைக்கழகம்  (University of Melbourne)

எழுத்துத்துறைப் பிரவேசம்

1968 ஆம் ஆணடு; இவரது 14 ஆவது வயதில் கல்லூரியால் வெளியிடப்பட்ட; “உயிர்ப்பு” என்ற சஞ்சிகையின் ;ஆசிரியராக இவரது எழுத்துப்பணி ஆரம்பித்தது. ஏற்கனவே கல்லச்சுப் பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதியுள்ள இவரது “வயிற்றுக்கொடுமை” என்ற சிறுகதை 1970 ஆம் ஆணடு; தினபதி பத்திரிகையின ;வார இதழான சிந்தாமணியில் முதன்முதலில் பிரசுரமானது. 1970 ஆம் ஆணடு; சுதந்திரன் ;பத்திரிகையின் நிருபராக பத்திரிகை ஈடுபாடு ஆரம்பித்தது. இவரது உயிரியல்பாட ஆசிரியர ;மயிலங்கூடலூர் பி.நடராசன் அவர்களே தன்னை எழுத்துத் துறையில் ஊக்குவித்தவரும், சுதந்திரன் ;பத்திரிகையில் நிருபராகச் சேர்த்துவிட்டவரும் என்பதை நன்றியோடு எப்போதும் நினைவுகூருகின்றார்.

ஆசிரியர்

திரு.பி.நடராசன் அவர்களே “திருமுருகிறை” என்ற புனைபெயரைத் தனக்கு வைத்ததாகக் கூறும் இவர், அரசியல் செய்திகள், கட்டுரைகளை எழுதும்போது “திருமுருகிறை”, “திருமுருகரசன்”, “பாடும்மீன்” என்னும் புனைபெயர்களில் எழுதிவந்தார்.

இவரது சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் பிரபல பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. நாடகங்களை மேடையேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டபோது நாடகங்களையும், கவியரங்குகள,; இசை நிகழ்ச்சிகள் என்று தேவையேற்பட்டபோதெல்லாம் கவிதைகளையும், பாடல்களையும் எழுதியுள்ளார்.

(2)

கலை, இலக்கிய, சமூகப்பணிகள்

இலங்கையில்

பாடசாலைக்காலத்தில் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் முதற்பரிசு பெற்றுள்ளார். பல நாடகங்களில் நடித்திருக்கிறார். 15 ஆவது வயதில் சோக்கிரட்டீஸ் நாடகத்தினை இயக்கி மேடையேற்றியதுடன் அதில் சோக்கிரட்டீசாக நடித்து மிகுந்த பாராட்டைப் பெற்றவர். 15 ஆவது வயதில் அவரே எழுதி, இயக்கி, சகமாணவர்களோடு நடித்து மேடையேற்றிய நாடகம் “சாப்பாடா சமிபாடா”. சோக்கிரட்டீஸ், சாப்பாடா சமிபாடா ஆகிய இவ்விரு நாடகங்களும் 1969 ஆம் ஆண்டு; பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் மேடையேற்றப்பட்டு ஆசிரியரக்ள், மாணவர்கள,; பொதுமக்கள் அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றன. இதுவே அவரது கலைப்பயணத்தின் முதலாவது மேடையேற்றமாகும்.

இவரது சொந்த ஊரான, களுவாஞ்சிகுடியில் நூல் நிலையம் ஒன்று இல்லாத குறையைப் போக்குவதற்காக நண்பர்களோடு சேர்ந்து, எம்.ஜீ.ஆர். மன்றத்தினை அமைத்து அதன் சார்பில் நூல்நிலையம ஒன்றை 1970 ஆம் ஆண்டு அமைத்தார். களுவாஞ்சிகுடி பொதுமக்களின் உதவியால் வீடுவீடாகச் சென்று தென்னங்கிடுகுகளை அன்பளிப்பாகப் பெற்று அமைக்கப்படட் அந்த நூல் நிலையம் மிகவும் நல்ல முறையில் இயங்கியது.

இளம் நாடகமன்றம் என்ற பெயரில், 1971 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழர்களை ஒருங்கிணைத்து இவரால் உருவாகக்ப்பட்ட “இளம் நாடக மன்றம்” என்ற அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடக உலகில் அந்தக்காலத்தில் மிகவும் பிரபல்யத்துடன் விளங்கியது. இந்த மன்றத்தின் மூலம் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. பெரும்பாலும் எல்லா நாடகங்களையும் அவரே எழுதி நெறியாள்கை செய்ததுடன் முக்கிய பாத்திரங்களில் நடித்துமிருந்தார்.

1971 ஆம் ஆணடு; அவர் எழுதி, இயக்கி, பிரதான பாத்திரத்தில் (நாரதர்) நடித்த நாடகம் “கற்பனையில் தேவலோகம்” ம.தெ.எ. பற்று கலாசாரப் பேரவையின் நாடகப் போட்டியில் முதற்பரிசையும், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ஆகியவற்றுக்கான பரிசுகளையும் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் பலமுறை இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது.

1973 ஆம் ஆண்டு அவரது இளம் நாடக மன்றத்தின் சார்பில் அவரது தலைமையிலும், நெறிப்படுத்தலிலும் நடாத்தப்பட்ட நாடகவிழா அவரது இளமைக்காலச் சாதனைகளில் ஒன்றாகும். பட்டிருப்பு மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தை சுற்றிவர படங்குகளைக்கொணடு; சுவரெழுப்பி, உள்ளே அழகான மேடை அமைத்து, இரண்டாயிரம் பார்வையாளர்களுக்கு; கதிரைகள் போடப்பட்டு, அனுமதிச் சீட்டுக்களை விற்பனை செய்து, பெண்பாத்திரங்களுக்குப் பெண்களை நடிகக்வைத்து நடாத்தப்பட்ட இந்த நாடகவிழாவில், நந்திவர்மன் காதலி, கற்பனையில் தேவலோகம், தம்பியாடி இது ஆகிய மூன்று நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

திரு. சு.ஸ்ரீகந்தராசா வெறும் நாடகக் கலைஞராக மட்டுமல்லாமல் வில்லிசைக் கலைஞராகவும் விளங்கியிருக்கிறார். வில்லுப்பாட்டுக்களை எழுதி வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடாத்தியதுடன், மட்டக்களப்பு கலாசாரப் பேரவையின் வில்லுப்பாட்டுப் போட்டிகளிலும் சிறந்த வில்லிசைக் கலைஞராகப் பரிசுகள் பெற்றுள்ளார். மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களை நாடகம்போல அமைத்து மேடையேற்றியுள்ளார். நாட்டுப்பாடல் போட்டிகளில் பலமுறை அவர் தயாரித்த நிகழ்ச்சிகள் முதற்பரிசுகளைப் பெற்றுள்ளன.

ஏறத்தாழ ஐம்பது நாடகங்களை எழுதியும், நடித்தும், நெறியாள்கை செய்தும் உள்ள இவரது நாடகங்கள் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் பலமுறை அரங்கேறியுள்ளன. அவற்றில், கற்பனையில் தேவலோகம், தம்பியாடி இது, பிராயச்சித்தம், ஆலம்பழம்,; புத்திர பாசம், ஊருக்குத்தாண்டி உபதேசம், உணர்ச்சிகள், சந்ததிச் சுவடுகள் ஆகிய நாடகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல ஊர்களில் பலமுறை அரங்கேற்றப்பட்டு மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொணடன.
(3)

அந்த நாட்களில். மட்டக்களப்பு நகரில் மாதமொருமறை நடைபெற்றுவந்த பௌணமி தினக் கலைவிழாவில், இளம்நாடக மன்றத்தின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றுப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.

கிராமியக்கலைகளான, நாட்டுக்கூத்து, நாட்டுப்பாடல், வசந்தன், கும்மி, கோலாட்டம் ஆகியவற்றைப் பேணி வளர்கக்வும், அவற்றையெல்லாம் ஒருமுகப்படுத்தவும், அவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கவும், இளங்கலைஞர்களைப் பயிற்றுவிக்கவும், எதிரகாலத்தில் இக்கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாக்கவுமாக “பட்டிருப்புத்தொகுதி கலைஞர் ஒன்றியம்” என்ற அமைப்பை 1982 அம் ஆண்டு உருவாக்கினார். அதன் சார்பில்1983 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பட்டிருப்பு மகாவித்தியாலயத்தின் திறந்தவெளி அரங்கில் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவின் பிரதம விருந்தினராக அப்போதைய பிரதேச அபிவிருத்தி அமைச்சரும், மட்டக்களப்பு முதலாவது பாராளுமன்ற உறுப்பினருமான, சொல்லின் செல்வர் செ. இராசதுரை அவர்கள் கலந்து பாராட்டிச் சிறப்பித்தார்.

களுவாஞ்சிகுடி சைவமகாசபையின் செயலாளராக அவர் பதவிவகித்தபோது, 1987 ஆம் ஆணடு; பேச்சு. பண்ணிசை, திருக்குறள் போட்டிகளை மாவட்ட ரீதியில் நடாத்தினார். இப்போது கிடைக்கப்பெறும் தொழில்நுட்ப மற்றும் தொலைபேசி வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில் 54 நடுவர்கள் அடங்கிய பதினெட்டு நடுவர்குழுக்களைக்கொண்டு ஒரே நாளில், ஒரே வேளையில போட்டிகளை நடாத்தியமை ஒரு சாதனையாகும். வடக்கில் வாழைச்சேனை முதல் தெற்கில் பாண்டிருப்பு வரையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல்யமான பாடசாலைகளைச் சேரந்த நூற்றுக்கணக்கான மாணவமாணவிகள் இந்தப்போடடிகளில் பங்குபற்றியிருந்தனர்.
அவுஸ்திரேலியாவில்:

திரு.சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் அவுஸ்திரேலியாவிலும் தனது கலை, இலக்கியப் பணிகளையும், சமூகத் தொண்டுகளையும் தொடர்ந்துகொண்டிருக்கின்றார். சிலநாடகங்களை எழுதி, இயக்கியுள்ளார். சிலவற்றில் அவரே முக்கிய பாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.

1991 ஆம் ஆணடு; செப்டம்பர்மாதம் அவர் அவுஸ்திரேலியாவுக்கப் புலம்பெயர்ந்து, நான்கு மாதங்களில் 1992 தைமாதம் மெல்பேணில் நடைபெற்ற பொங்கல் விழாவில் “மாவீரன் எல்லாளன்” என்ற வரலாற்று நாடகத்தையும், “மெல்பேண் கந்தையா” என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதி, இயக்கி, இரண்டிலும் பிரதான பாத்திரங்களில் நடித்து மெல்பேண் தமிழ் மகக்ளின் பாராட்டைப் பெற்றார். மாவீரன் எல்லாளன் என்ற நாடகத்தில் அவர் எல்லாளனாக நடித்திருந்தார். “கன்னிமனம்” சமூகநாடகம், “அபப்டியோ சங்கதி ” தாளலய நாடகம் என்பனவற்றையும் எழுதி, நெறியாள்கை செய்து மெல்பேணில் மேடையேற்றியுள்ளார்.

மேலும் 1993 அம் ஆண்டு, முதுபெரும் எழுத்தாளர். எஸ்.பொ. அவர்களின் “வலை” என்ற நாடகத்தை நெறியாள்கை செய்து அரங்கேற்றியுள்ளார். மெல்பேணின் பிரபல்யமான கலைஞர்களோடு, தமிழ் மொழியில் பரிச்சியம் இல்லாத சில புதியவர்களையும் இணைத்து அழகிய தமிழில் அவர்களைப் பேசவைத்து இந் நாடகத்தினை அவர் இயக்கியிருந்தார்.

திரு சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து ஆறுமாதங்களில் 1992 மார்ச மாதம் முதல் இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின்செயற்குழு உறுப்பினரானார். அன்றிலிருந்த தொடர்ந்து 12 வருடங்கள் அச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்திருந்து, இதழாசிரியர், முத்தமிழ்விழாக்குழுத் தலைவர், குடிவரவு உபகுழுமுதல்வர், சங்கத்தலைவர் ஆகியபதவிகளை வகித்துப் பணியாற்றினார்.

1993 இல் மெல்பேணில் மாணவர்களுக்கான பேச்சு, இசைப் போட்டிகளையும் முத்தமிழ் விழாவையும் ஆரம்பித்து, இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தொடர்ந்து 11 வருடங்கள் அப்போட்டிகளையும், முத்தமிழ் விழாவினையும் தொடர்ந்து நடாத்தினார். அந்தப் போட்டிகளும், முத்தமிழ் விழாவும் இன்றும் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருவது அவரது தொலைநோககுப் பார்வை மிக்க இன்றியமையாத பணியை எடுத்தியம்பிக்கொண்டிருக்கினற்து.
(4)

1993 ஆம் ஆணடு தொடக்கம், அனைத்துலக ரீதியிலான சிறுகதை. கவிதைப் போட்டிகளைப் பத்து வருடங்களுக்கும் மேலாக ஆண்டுதோறும் தொடர்ந்து நடாத்தினார். இலங்கை, இந்திய பிரபல எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் அந்தப் போட்டிகளில் பங்குபற்றினார்கள். வெற்றிபெற்றோர் பணப்பரிசுகளைப் பெற்றனர்.

அவரது முயற்சியால் முதல் மூன்று வருடங்கள் போட்டிக்குக் கிடைகக்ப்பெற்றவற்றில் சிறந்த 20 சிறுகதைகளை “புலம்பெயர்ந்த பூக்கள்” என்ற பெயரில் நூலாக வெளியிடபப்ட்டது.

1993-94 காலப்பகுதியில் அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் தலைவராக அவர் பணியாற்றியபோது, அகதி அந்தஸ்துக் கோரும் விண்ணப்பதாரிகளுக்கு அவர் செய்த சேவை அளப்பரியது.

1994 – 95 இல் “தமிழ்உலகம்” (Tamil World)என்னும் இருமொழிப்பத்திரிகையின் ஆசிரியராகத் தமிழ்ப்பணியாற்றினார்.

ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நிரவ்கிகக்ப்பட்டு வந்த தமிழ்ப்பாடசாலைகள் 2000 ஆம் ஆண்டுவரை. அச்சங்கத்தின் உபகுழு ஒன்றின் மேற்பார்வையிலேயே இயங்கிவந்தன. திரு.சு.ஸ்ரீகந்தராசா சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதும், தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பு என்னும் ஓர் அமைப்பைச் சட்டரீதியாக அமைப்பதற்கான சரத்து ஒன்றினை இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் அமைப்புவிதிகளில் முறைப்படி சேர்த்து சகல தமிழ்ப் பாடசாலைகளும் பாடசாலைகள் கூட்டமைப்பினால் நிரவகிகக்ப்படும் செயற்பாட்டினை ஏற்படுத்தினார். அதன்மூலம் பாடசாலைகளின் நிருவாகம் சிறப்புற நடைபெறுவதற்கு வழிவகுத்தார். அதன்படியே இன்றுவரை பாடசாலைகள் கூட்டமைப்பு, தமிழ்ச் சங்கத்தின் கீழ் சுயாதீனமான ஓர் அமைப்பாகச் செயற்பட்டுவருகின்றது.

விக்ரோறிய மாநிலத்தில் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில தமிழ் மொழி ஒரு பாடமாகச் சேர்க்கப்படுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுள் அவரும் ஒருவர் என்பதுடன், அச்செயற்பாடுகளை துரிதப்படுத்தி அங்ககீகாரத்தைப் பெறுவதில் அவர் முன்னின்று உழைத்தவராவார். அதற்கான அவரது பணி மிகவும் முக்கியமானது.

தமிழ்மொழியை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குத் தாய்மொழிகக்கான மேலதிக புள்ளிகளும் வெகுமதியாக வழங்கப்படுவதால் சிறந்த பெறுபேறுகள் கிடைப்பதற்கும், பல்கலைக் கழகங்களில் உயர்ந்த துறைகளுக்குத் தெரிவுசெய்யப்படவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழும் இளம் தலைமுறையினருக்குத் தமிழ் மொழியில் ஆர்வமும், ஆற்றலும் உண்டாவதற்கு மிகப்பெரிய உந்துசக்தியாகவும் இந்த ஏற்பாடு விளங்குகினற்து.

1978 ஆம் ஆண்டு; ஆரம்பிக்கப்பட்ட விக்ரோறிய இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் பெயர் காலத்தின் ;கட்டாயம் காரணமாக, “விக்ரோறிய ஈழத்தமிழ்ச்சங்கம”; எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது அவரது தலைமையிலேயே என்பதுடன், அதன் காரணமாக இலங்கைத் தமிழ்ச்சங்கத்திற்கும் ஈழத்தமிழ் சங்கத்திற்கும் தலைவராக இருந்த ஒரேயொருவர் திரு. சு. ஸ்ரீகந்தராசாவே என்னும் சிறப்பிற்குரியவரானார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயங்கள்.

அவர் இலங்கைத்தமிழ்ச் சங்கத்தின ;(2001 இலிருந்து ஈழத்தமிழ்ச்சங்கம்) தலைவராகக் கடமையாற்றிய 2000, 2001 அம் ஆணடுகளில் முத்தமிழ் விழாவை மட்டுமன்றி, முதன் முதலாகத் தனித் தமிழ் இசை விழாவையும், தமிழ் நடன விழாவையும், சங்கத்தின் தலைவராக அவர் பணியாற்றிய இரண்டு வருடங்களும் நடாத்தினார்.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் இருந்து இயங்கும் அவுஸ்திரேலிய பட்டதாரிகள ; தமிழர் சங்கத்தினால் தேசியப் பரீட்சகர்களில் ஒருவராக நியமிக்கபப்ட்ட அவர் சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போடடிகளுக்கு மெல்பேண் மாநில மேற்பார்வையாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.

(5)

1993 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாணவர்களுக்குப் தமிழ்ப் பேச்சுக்கலையில் பயிற்சிகொடுத்து, பேச்சுப்போடடிகளுக்குத் தயார்செய்து வரும்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகினறார்.

2010 ஆம் ஆண்டு யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அவுஸ்திரேலியக் கிளையினருக்காக “கடன்பட்டார் நெஞ்சம் ” என்ற தென்மோடி நாட்டுக்கூத்தினை, மெல்பேண் கலைஞர்களுக்குப் பழக்கி, நெறியாள்கைசெய்து, மேடையேற்றினார். அதன் மூலம் திரட்டபப்ட்ட நிதி யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தின் மனித நேயச் செயற்பாடுகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அவரது இந்தக் கலைப் பணியைப் பாராட்டித் திருமறைக்கலாமன்றத்தினர் அதே மேடையில் பொன்னாடைபோரத்தியும், விருது வழங்கியும் கௌவித்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாவை நடாத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் தலைவராக 2011 இலிருந்து 2013வரை 3 வருடங்கள் சேவை புரிந்த அவர் 2009 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலகத் தமிழ் ஆய்வுமன்றம்அவுஸ்திரேலியா என்ற அமைப்பின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்.

தமிழினம், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகினற்hர். அவற்றைப் பற்றித் தமிழ் மக்களுக்கு அறியத்தருவதில் ஆர்வம் கொண்டு மேடைகளில் உரையாற்றியும், இலங்கை, இந்திய, அவுஸ்திரேலியப் பத்திரிகைகளில் எழுதியும் வருகின்றார். நூல்களாகவும் வெளியிட்டுள்ளார்.

தமிழ்மொழியை வாசித்தறிய முடியாத இளம் சமுதாயத்தினரும், தமிழரல்லாத பிற சமூகத்தவரும், சங்கத்தமிழ் இலக்கியங்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில், சங்கத்தமிழ் பற்றிய அவரது நூலை Sankam Period and Sankam Literature  என்றபெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளார்.

“வானமுதம்” என்னும் தமிழ் ஒலிபரப்புச் சேவையினை நடாத்தும் விற்றல்சீ தமிழ்ச்சங்கத்தினை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவர் அதன் முதலாவது தலைவராக ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றினார். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிற்பகல் 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை இரண்டு மணிநேரம் வானமுதம் தமிழ் ஒலிபரப்பு நடைபெறுகினற்து. அதில் அறிவிப்பாளராக இருப்பதுடன் பல நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்குகினறார்.

வானொலி நிகழ்ச்சிகளில் சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், திருக்குறள் மற்றும் தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்களைப்பற்றி உரையாற்றி வருகின்றார். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் இளைஞர்கள் – எதிர்காலச் சந்ததிகள் – நமது தமிழ் மொழியின் பெருமை, தமிழ்ப்பண்பாட்டின் மேன்மை, தமிழ் இலக்கியங்களின் செழுமை என்பன பற்றி அறிந்துகொளள் இந்த நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன.

அவுஸ்திரேலியாவில் வெளிவந்தவையும், வெளிவருபவையுமான பெரும்பாலான எல்லாப் பத்திரிகைகளிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்துளள்ன. அக்கினிக்குஞ்சு, தமிழ் உலகம், ஈழமுரசு, உதயம், உதயசூரியன், இன்பத்தமிழ், தமிழோசை, தென்றல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவுஸ்திரேலியாவுக்கு வெளியில், வீரகேசரி, தினக்குரல், ஞானம், செங்கதிர், தினமலர், இனிய நந்தவனம் முதலிய இலங்கை, இந்தியப் பத்திரிகைகளிலும் எழுதிவருகினற்hர்.

இப்பொழுது செயற்பட்டுக்கொண்டிருக்கும் “அக்கினிக்குஞ்சு” இணையப் பத்திரிகையின ; கௌரவ ஆசிரியராக இருக்கிறார்.

(6)

சமூகசேவையில் வகித்த பதவிகள் இலங்கையில்

1. செயலாளர,; எம்.ஜீ.ஆர் மன்றம். களுவாஞ்சிகுடி(1970 இலிருந்து)

2. இயக்குனர், இளம் நாடக மன்றம்;. களுவாஞ்சிகுடி(1971 இலிருந்து)

3. செயலாளர், இளைஞர் மறுமலர்ச்சி மன்றம்;. களுவாஞ்சிகுடி (1972)

4. அம்பாறை மாவட்டச் செயலர், அரசாங்க எழுதுவினைஞர்சங்கம்.(1974-75)

5. செயற்குழு உறுப்பினர் அகில இலங்கை அரசாங்க எழுதுவினைஞர்சங்கம். (1974-75)

6. ம.தெ.எ.பலநோக்கு கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபை உறுப்பினர் (1973-74)

7. செயலாளர் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (1974 – 77)

8. செயலாளர் களுவாஞ்சிகுடி புனர் வாழ்வுக்கழகம் (1977- சூறாவளிககு;ப்பின்)

9. தலைவர், பட்டிருப்புத் தொகுதி கலைஞர் ஒன்றியம் (1982 முதல்)
10. செயலாளர் களுவாஞ்சிகுடி வரியிறுப்பாளர் சங்கம் (1987-1988)

11. செயலாளர் களுவாஞ்சிகுடி சைவமகாசபை (1986-88)

12. இணைச்செயலாளர், களுவாஞ்சிகுடி பிரதேச பிரஜைகள் குழு (1988-91) அவுஸ்திரேலியாவில்:

1. செயற்குழு உறுப்பினர் இலங்கைத் தமிழ் சங்கம் 1992 – 1999)

2. முத்தமிழ் விழாககுழுத் தலைவர், (1993-2002)

3. தலைவர், இலங்கைத்தமிழ்ச்சங்கம் (ஈழத்தமிழ்ச்சங்கம்) (1999-2001)

4. தலைவர், அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகம் (1993-1994)

5. ஆசிரியர,; “தமிழ் உலகம் – Tamil World”   1994-1995

6. தலைவர், விற்றல்ஸீ தமிழ்ச்சங்கம் (2005-2010 வரை).

7. அறிவிப்பாளரும் நிகழ்ச்சித்தயாரிப்பாளரும். “வானமுதம்” தமிழ ஒலிபரப்புச் சேவை (2005 இதுவரை)

8. தலைவர், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் (2011 – 2013)

9. பொதுச்செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் – அவுஸ்திரேலியா (தற்பொழுது)
(7)

வெளியிட்ட நூல்கள்
1. கணண்கியம்மன் ஊர்சுற்றுக்காவியம் (களுவாஞ்சிகுடி சைவமகாசகையின் சார்பில்)

2. புலம்பெயர்ந்த பூக்கள் (சிறுகதைத் தொகுதி – அவுஸ்திரேலியாவில் விக்ரோறிய இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 1996)

எழுதி வெளியிடட் நூல்கள்
1. சந்ததிச் சுவடுகள் (நாடகங்களின் தொகுப்பு. ம.தெ.எ.ப. பிரதேச கலாசாரப் பேரவையால் 1988 இல் வெளியிடப்பட்டது)

2. மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்(2002)

3. தமிழினமே தாயகமே (கவிதைத் தொகுப்பு)(2002) 4. தமிழின்பெருமையும் தமிழரின் உரிமையும் (ஆய்வுரைகள்)(2006)

5. ஓர்ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப்பயணம் (2006)

6. சங்ககாலமும், சங்க இலக்கியங்களும் (எல்லோரும் அறிந்துகொளள் இனியதோர் அறிமுகம்)(2009)

7. Sankam Period and Sankam Literature  (2012) (சங்ககாலமும், சங்க இலக்கியங்களும் ஆங்கில மொழிபெயர்ப்பு)

மற்றும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ( உரைச்சித்திர இறுவெட்டு 2011)

இவை தவிர இருபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்துளள்ன.

விரைவில் வெளிவர இருப்பவை:

ஐம்பெருங்காப்பியங்கள் – உரைநடை மாமன்னன் எல்லாளன் (வரலாற்று நாடகம்)

திருவெம்பாவைச்சிறப்பு – உரைச்சித்திரம்

தமிழ் இன்பம் (வானொலிப் பேச்சுக்கள்)

சங்க இலக்கியக் காட்சிகள் (இலக்கியம்)

குறள் இன்பம் (திருக்குள் விளக்கக் கட்டுரைகள்)

ஸ்ரீகந்தராசாவின் சிறுகதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

(8) பெற்றுள்ள விருதுகள், படட்ங்கள்

1. சிறந்த நடிகர், சிறந்த நாடக இயக்குனர்,; சிறந்த நாடக எழுத்தாளர், சிறந்த வில்லிசைக் கலைஞர் முதலிய விருதுகளை மட்டக்களப்பு கலாசாரப் பேரவையினால் 1970 ஆம் ஆணடுக்கும் 1982 ஆம் ஆணடுக்குமிடையில் பலமுறை பெற்றுள்ளார்.

2. பேச்சுப் போட்டிகளில் உள்ளூரிலும், மாவட்ட ரீதியிலும், அகில இலங்கை ரதீயிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

3. 1974 ஆம் ஆணடு; “சுதந்திரன்” பத்திரிகை நடாத்திய கவிஞர் நலீவணன் நினைவு வெண்பாப் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.

4. அவுஸ்திரேலியாவில், அவரது தமிழ்ப்பணிக்காக விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம், விக்ரோறிய தமிழ் கலாசாரக்கழகம், மெல்பேண் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்புக்கள் பாராட்டி விருதுகளை வழங்கியுள்ளன.

5. 2005 ஆம் ஆணடு அவுஸ்திரேலியாவில் “ செந்தமிழ்ச் செல்வர் ” என்ற பட்டமும் சிறப்பு விருதும், பல்லினக் கலாசார அமைச்சர் அவர்களால் வழங்கப்படட்து.

6. 2007 இல் அவுஸ்திரேலிய அரசால், விக்ரோறிய மாநிலத்துக்கான சமாதான நீதவானாக  (Justice of the Peace) நியமிக்கபப்ட்டார்.

7. 2007 இல், இந்தியா, தமிழ் நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித வளனார் கல்லூரி, “ அயலக முத்தமிழ்ப் பணி ” க்கான விருதை வழங்கிக் கௌரவித்தது

8. 2010 இல் அடிலைட்டில், தெற்கு அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச்சங்கம்
“ தென்னீழக் கலைவாணர் ” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

9. 2011 இல். “ தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் சமுதாயம் என்பவற்றுக்கு அவர் அர்ப்பணிப்புடன ;ஆற்றிய சேவைக்காக ” மெல்பேண் திருமறைக்கலாமன்றம் விருது வழங்கிக் கௌரவித்தது.

10. 2013 இல், “ கடந்த 22 வருடகாலத்திற்கும் மேலாக மெல்பேணில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அரும்பணியாற்றியமைக்கான விருது ” விக்ரோறிய ஈழத்தமிழ்ச்சங்கத்தினால் சங்கத்தின் ;முத்தமிழ் விழாவில் வழங்கப்பட்டு;, தமிழகத் தமிழறிஞர் ; முனைவர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் முன்னிலையில் கௌரவிக்கபப்ட்டார்.

தனது 15 ஆவது வயதில் இருந்து தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், நாடகம், என்பவற்றுக்காகவும், தமிழ் சமுதாயத்திற்காகவும் இலங்கையில் சேவை செய்துவந்த திரு. சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் தன்னலமற்ற பணிகள் 1991 ஆம் ஆண்டு அவர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த நாள் முதல் இன்றுவரை தொடர்கின்றன.

தமிழ் மகக்ளுக்கு நன்மையும், உதவியுமான பணிகளையும், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு என்பவற்றின ;மேம்பாட்டுக்கான சேவைகளையும், புலம்பெயர்ந்த நாட்டில் தமிழ் மக்களின் மேன்மைகளை வெளிப்படுத்தும் கைங்கரியங்களையும், எதிரகாலச் தமிழ்ச் சந்ததிகளிடம் தமிழ் மொழியைத் எடுத்துச் செல்லவும், தக்கவைக்கவுமான நடவடிக்களையும் அவர் இடைவிடாது தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றார்.

மேலும், ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும், கலை இலக்கிய முயற்சிகளுக்கும் பண உதவிகளை மனமுவந்து செய்துவருவதன் மூலம் மனிதநேயம்மிக்க உள்ளம் கொண்டவராகவும் திகழ்கின்றார்.

யாழ் எஸ். பாஸ்கர் ;(மெல்பேண்) – களுவாஞ்சிக்குடி துரை. நிசாகரன் (சிட்னி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here