லயன் கலாநிதி.அ.செல்வேந்திரன் MJF/MAF/JP.

0
447

தாண்டவன்வெளி லொயிட்ஸ் அவனியுவில் அருணாசலம் நாகரெத்தினம் தம்பதியினருக்கு பிறந்த 5 பிள்ளைகளில்  மூத்த புதல்வர்.

மட்டக்களப்பு கோட்டைமுனை மகாவித்தியாலயத்தில் (தற்போது இந்துக்கல்லூரி) கல்வியை பூர்த்தி செய்த இவர் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரியாகவும், பின்பு RMA ஆகவும் RMC யாகவும் சேவைசெய்து  கிழக்கு மாகாணசபையில் 2008 முதல் 2012 வரையும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சில் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் கல்வியில் தொழில்நுட்ப டிப்ளோமா (சிவில் பொறியியல்) பட்டமும் உளவியல் டிப்ளோமா பட்டமும் அமெரிக்க மாற்று மருத்துவ துறைக்கான திறந்த பல்கலைக்கழகத்தில் 15.3.2009ல்( இலக்கம் 151031) கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளதுடன், 1998 முதல் சமாதான நீதிவானாகவுமும் சேவையாற்றுவதுடன் மேலும்  சாமசிறி தேசமான்ய பட்டங்களையும் கொண்டவராகவுமுள்ளார்.

பல சமூகசேவை நிறுவனங்களில் பல பதவிகளை வகிக்கின்ற இவரது முயற்சி அயராது தளராது இம்மாவட்ட அபிவிருத்தியிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஆர்வமுள்ளவராகவுள்ள சிறந்த சமுக சேவையாளர்.

கிழக்கு புனர்வாழ்வு கழகத்தில் ஆயரின் தலைமையில் சுமார் 14 வருடங்கள் பல பதவிகளை வகுத்து சமூகப்பணிகளை புரிந்ததோடு மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் தலைவராகவும், இலங்கை புற்று நோய்ச்சங்கம் மட்டக்களப்பு கிளையின் செயற்குழு உறுப்பினராகவும், அகில இலங்கை இந்துமாமன்ற முகாமைச்சபை உறுப்பினராகவும், மட்டக்களப்பு இந்துமாமன்ற உப தலைவராகவும்,  மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக்கூடலில் செயற்குழு உறுப்பினராகவும்  தன்னை இணைத்துள்ள செல்வேந்திரன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினராகவும் உளளார்.

தமிழ் இளைஞர்பேரவை உறுப்பினராக இருந்தபோது சிறிமாவோ அம்மையாரின் ஆட்சியில் புதிய குடியரசு அரசியல் யாப்பு 1972ல் கொண்டு வந்தபோது தமிழருக்கு சாதகமாக இருந்த சரத்து அகற்றப்பட்டதற்காகவும் கல்வி தரப்படுத்தல் கொண்டுவந்து தமிழ் மக்களின் கல்வியில் கைவைத்ததற்கு எதிர்ப்பு காட்டுமுகமாக சிங்களமொழிப் பலகைகளையும் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமைக்காகவும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைத்திருந்த போது தளபதி அமிர்தலிங்கம் அவர்களும் அவரோடு சிவசிதம்பரம் ஐயா அவர்களும் நேரடியாக நீதிமன்றத்தில் இவருக்காக வாதாடி விடுதலை பெற்றுக்கொடுத்ததுடன் நிறுத்தி வைக்கப்பட்ட தனது அரச பணியையும் மீளப்பெற்றுத்தந்தது மாபெரும் வரலாறாகும்.

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ல் கைதுசெய்யப்பட்டு 3 மாத தடுப்புக்காவலில் விடுதலை பெற்றதும் வரலாறாகும்.

ஆண்டில் த.வி.கூட்டணியில் அமரர் ஜோசப் பரராசசிங்கத்துடன் பாராளுமன்ற பொதுத்தேர்தலில்போட்டியிட்டவர்.

1999ம் ஆண்டில் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தில் இணைந்து கொண்ட இவர் தொடர்ச்சியாக பல பதவிகளை  கழகத்தின்பால் நிறைவேற்றியுள்ளார்.

2001/2002 ம் ஆண்டு சர்வதேச லயன்ஸ் கழகத்தின் சர்வதேசத் தலைவர் J.Frank moore III  அவர்களிடமிருந்து MJFபட்டத்தினை  பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் முதலாவது உறுப்பினருக்குரிய் பெருமை இவருக்குரியதாகும்.

இதைப்போலவே 2007/2008 ம் ஆண்டு  MAF பட்டத்தினை முன்னாள் சர்வதேசத்தலைவர் லயன் மகேந்திர அமரசூரிய அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட இக்கழகத்தின் முதல் உறுப்பினர்.

பலவருடங்களாக லயன்ஸ் மாவட்டத்தலைவராகவிருந்து  Top Ten சிறப்பு விருதினையும்  Excellance  வலயத்தலைவர் விருது மற்றும் சர்வதேச Pin ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

பாராட்டு விருதும் சான்றிதழும் பெற்றதுடன்  சிறந்த பிராந்தியத் தலைவருக்கான சிறப்பு விருதும் ஆளுனரின் விசேடதிட்ட இணைப்பாளருக்கான விருதினையும் பெற்றுள்ளதுடன் சகல ஆளுனர்களினதும் விருதுகளுடன் சர்வதேசத் தலைவர்களின் Excellance award  & Pinகளும் பெற்று சிறந்த செயலாளராக சிறந்த தலைவராக  வலயத்தலைவராக சிறந்த பிராந்தியத்தலைவராக பல விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

2015-2016 ம் ஆண்டு ஆளுனர் லயன் விக்கும்பிரிய வீரக்கொடி அவர்களினது ஆளுனர்சபைச் செயளாளராகப் பதவி வகித்துள்ளார்.  இப்பதவியானது லயன்ஸ் வரலாற்றில் முதல்முறையாக ஒரு தமிழருக்கு கிடைத்தது.

தற்போது 2017-2018 ம் ஆண்டு  ஆளுநர் சபையில் ஆளுநரின் பிரதம இணைப்பாளரும் ஆளுநர்சபைச் செயலாளரின் ஆலோசகராகவும் பிராந்தியம் 10ன் பிராந்திய ஆலோசகராகவும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் செயலாளராகவும் செயலாற்றுகின்றார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here