சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நாங்கள் படிக்கும் படிக்கும் போது

1
429

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது எங்கள் கல்லூரியின் வெள்ளிக் கிழமை காலைக் கூட்டம் மூன்று பிரிவாக நடக்கும்.

அதில் மிகப் பெரிய விசேஷம் இந்து மாணவர்களுக்கான காலைக் கூட்டம் எங்கள் கல்லூரியின் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் நடைபெறும். ( இந்த ஆலயம் இன்றும் இருக்கிறது. ஆனால் இந்தக் கோவிலின் அருகாமையில் இப்போது ஒரு இந்துக் குடும்பமும் நிரந்தரமாக வாழ்வதில்லை.) இந்தக் காலைக் கூட்டத்தை பொன்னையா சேர் நடாத்துவார். அப்போது இந்துப் பெண்கள் கவுனை விடுத்து நெடிய பாவாடை, சட்டை அணிந்தே பாடசாலைக்கு வருவர்.

கிறிஸ்துவ மாணவர்களின் காலைக் கூட்டத்தை அரியராசா சேர் நடாத்துவார். பொதுவான காலைக் கூட்டம் பாடசாலை வளாகத்துள் இடம் பெறும். கிறிஸ்தவ மாணவிகள் பலர்… கவுண் அணியாமல் பஞ்சாபி உடை அணிந்து வந்தனர்.

எங்கள் பாடசாலையில்….. திருமதி. செல்வராசன், திருமதி. குணசீலன், திருமதி. துரைராசா போன்ற பெரும் ஆசிரிய மணிகள் கற்பித்தனர்.

எங்கள் கல்லூரியில்…. ஆசிரியர்கள் மீதோ அல்லது மாணவிகள் மீதோ எந்த விதமான உடைக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.

இன்றும் அதே நிலையே தொடர்கின்றது…

1974 / 1975 களில் எங்கள் கல்லூரியின் விஞ்ஞான மாணவ மன்றத்தின் தலைவராக நான் இருந்த போது… மன்றத்தின் இணைச் செயலாளர்களாக காரைதீவைச் சேர்ந்த சச்சிதானந்தமும், சம்மாந்துறையைச் சேர்ந்த அமரர் சச்சிதானந்த ராஜாவும் இருந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தின் தலைவராக பேர்பெற்ற இளம் விஞ்ஞானி வினோத் குமார் இருந்தார்.

இத்தனைக்கும் எங்கள் கல்லூரி நூறு ஆண்டுகள் கண்ட ஒரு முஸ்லிம் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தகவல்வல்கள் திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி “இந்துப் போராளிகளுக்கு” சமர்ப்பணம்.
— அபு நஜாத்

1 COMMENT

  1. அது ஒரு கனாக் காலம் சகோதரன் அபு நஜாத். இப்போ அரசியல் பித்தலாட்டம், சர்வதேச வலைப்பின்னல் போன்றவை ஒன்றாய் இருந்த சமூகத்தை பிரித்து விட்டது. சமகால மனிதன் மனிதம் தொலைத்து தம்மவர் ( தம் + அவர்), பிறர்தமர் (பிறர் + தமர்) என மதம், கலாச்சாரம் எனப் பிரிந்து வாழத் தலைப்பட்டதால். இதுதான் ஊழிக்காலத்துக் கோலமோ என்னவோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here