காத்தான்குடியின் முதல் இலக்கியப் பெண்பாத்தும்மா முகம்மட்

0
485

புதிய காத்தான்குடி முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் ஜனபான பாத்தும்மா முகம்மட் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்திலும் 18 வருடங்களும் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் 15 வருடங்களும் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

காத்தான்குடியின் முதல் இலக்கியப் பெண்ணாக திகழும் பாத்தும்மா முகம்மட் சிறந்த இலக்கிய வாதியும் எழுத்தாளருமாவார்.

இவர் எழுத்து முறையில் கலாபூசனம் என்ற அரச விருதை பெற்றுள்ள இவர் சிறந்த எழுத்தாளர், கவிச்சுடர், இலக்கியப் பெண், வீசு தென்றல், முதல் இலக்கியப் பெண், இலக்கியச் சிகரம், சிறுகதைச் செல்வி போன்ற பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார்.

அத்தனை முத்துக்கள், பொய்த் தூக்கங்கள், நா இடற வாய்தவறி எனும் மூன்று நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

பல்வேறு பட்டி மன்றங்களில் கலந்து கொண்ட இவர் பல பட்டி மன்றங்களுக்கு நடுவராகவும் இருந்துள்ளார்.
கலாபூசனம் என்ற அரச விருதினை கிழக்கு மாகாணத்தில் முதன் முதலில் பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் பெண்மனியும் இவரே ஆகும்.

காத்தான்குடி மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் அகில இலங்கை சமாதான நீதவானகவும் உள்ள இவர் காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் செயலாளராக இருப்பதுடன் பல்வேறு இலக்கிய அமைப்புக்களிலும் அங்கம் வகிக்கின்றார்.

பாத்தும்மா அவர்கள் ஓய்வு பெற்ற அதிபர் முகம்மட் அவர்களின் மனைவியும் டாக்டர் ஸஜாத் முகம்மட் அவர்களின் தாயாருமாவார். ஏன்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here