ஏட்டுஅண்ணாவியார் செ.சிவநாயகம் 

0
1052
                ஏட்டுஅண்ணாவியார் செ.சிவநாயகம்
இலங்கையில் தழிழர்களின் பாரம்பரிய அரங்க வடிவங்களுள் கூத்தும் ஒன்றாகும். மட்டக்களப்பிலே வடமோடி தென்மோடிக் கூத்துக்கள் அன்று தொடக்கம் இன்று வரை மிகவும் வீரியத்துடன் பயில் நிலையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கூத்துக்கலை உயிர் பெற்று விளங்குவதற்கு அடிப்படையாக அண்ணாவிமார்கள் விளங்குகின்றார்கள். இதனால் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டனர். கூத்துக்களில் ஆடல்இ பாடல், மத்தளம் வாசித்தல்இ உடையொப்பனை என பன்முகப்பட்ட ஆளுமைகளை உடையவர்களாக விளங்கினார்கள். அதேபோல் கூத்துக்களில் ஏடு பார்ப்பதும் முக்கிய கலையாகும். ஆனால் அதன் முக்கியத்துவத்தினை பெரும்பாலானோர் உணர்வதில்லை. ஏட்டுஅண்ணாவியார் எனப்படுபவர் கூத்து ஆரம்பம் தொடக்கம் அரங்கேற்றம் வரை கூத்துக்களரியிலிருந்து பாடல்களைப் பாடுபவர்களாகவும் ஆட்ட வடிவங்களை சொல்லிக்கொடுப்பவர்களாகவும் தேவைப்படுகின்ற போது பாடல்களை இயற்றக்ககூடியவர்களாவும் சிறந்து விளங்குகின்றார்கள். இவ்வாறான சிறப்புக்களையுடைய ஏட்டுஅண்ணாவியார்களுள் ஒருவர்தான் சிவநாயகம் அண்ணாவியார்.
இவர் திரு. செல்லையா என்பவருக்கும் அழகம்மா என்பவருக்கும் இரண்டாவது மகனாக 1948ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி ஏறாவூரில் பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை மட்ஃ இந்துக் கல்லூரியில் பயின்றார். இவர் சிறுவயதில் இருந்தே கூத்துக்கலையில் ஆர்வமாக இருந்தமைக்கான காரணம் இவரின் தந்தையும், கூத்து சமுகமும் தான். கூத்து செயற்பாடுகள் பரம்பரையாக எம்முன்னோர்களால் கடைப்பிடித்து வந்த நடைமுறைகளாகும். இவர்களால் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது என்பதற்கு சிவநாயகம் அண்ணாவியாரே சிறந்த எடுத்துக்காட்டு.
இவருடைய அப்பா செல்லையா அவர்கள் பெயர்;பெற்ற சிறந்த கூத்துக்கலைஞர் திறமையாக பாடவும்இ ஆடவும்இ மத்தளம் அடிக்கவும் வல்லவர். இதன் காரணமாக பல கூத்துக்களை சிவநாயகம் அவர்கள் சிறு வயதில் இருந்து பார்த்து வந்தார். 1954ம் ஆண்டு இவரது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு கூத்தினை தந்தையார் பழக்கினார். அப்போது இவருக்கு வயது ஆறு. இக் கூத்து பழகும் இடத்திற்கு தந்தையிடம் சென்று கூத்தினை பழகுகின்ற கலைஞர்களுடன் இணைந்து எப்படி தாளங்களுக்கு ஏற்றால் போல் கால்களை வைப்பதுஇ எப்படி பாடல்கள் முறிவடையாமல் பாடுவதென்றும்இ எப்படி விருத்தங்களை தாளத்திற்கு ஏற்ப ஏற்றி இறக்கி பாடுவதென்றும் ஆறு வயதாக இருக்கும் போதே அவரது மனதில் அழுத்தமாக பதிந்து கொண்டதாக அவர் கூறுகின்றார். கிருஸ்ணப்பிள்ளை அண்ணாவியார் அவர்களையே தனது குருவாக கூத்துக்களை இயக்குவதற்கும் கூத்து சம்மந்தமான சகல விடயங்களுக்கும் இவரையே தனது குருவாக மனதில் விரித்துக்கொண்டார். கிருஸ்ணப்பிள்ளை அண்ணாவியாரும் கதை சம்பவங்களுக்கு எற்ற வகையில் பாடல்களுக்கு என்னன்ன மெட்டுக்கள் அமைக்க வேண்டும் மற்றும் தாள வகைகள் பலவும் சொல்லிக்கொடுத்தார். இதுவே பிற்காலத்தில் சிவநாயகம் ஐயாவிற்கு கூத்துக்கள் எழுத உந்து சக்தியாக இருந்தது என சிவநாயகம் அவர்கள் கூறுகின்றார்.
கிருஸ்னப்பிள்ளை அண்ணாவியாருடன் இணைந்து 1990ம் ஆண்டு தர்மபுத்திரன் கூத்தை  இருவரும் சேர்ந்து பாடல்கலைப் பாடி தொகுத்து தர்மபுத்திரன் கூத்து பிரதி முழுவதும் எழுதி முடித்து சிறந்த முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனைப்போன்று 1996ல் திரு.சி.ஞானசேகரம் அவர்களை அண்ணாவியாராக கொண்டு பழக்கப்பட்ட இராவணேசன் எனும் கூத்து மாமாங்கேஸ்வரத்தில் மேடையேற்றப்பட்டது. இதில் சிவநாயகம் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார். இதன் பின் நாட்டு பிரச்சினை உக்கிரம் அடைந்தது. சீலாமுனையில் எவ்வித கூத்துக்களும் அரங்கேற்றப்படவில்லை சிவநாயகம் ஐயாவிற்கு நீண்டதொரு ஓய்வு கிடைத்தது.
இந்த காலப்பகுதியில் திரு.சி.ஜெயசங்கர்; அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பே சிவநாயகம் ஐயாவிற்கு கூத்துப் பாடல்கள்  எழுதும் துறைக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆரம்பக் கூத்துக்களில் உள்ள பாடல்களில் சொற்கள் மிகவும் தரம் குறைந்து மறியாதை குறைவாக எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக 2001ம் ஆண்டிற்கு முன்பு ஆடியரங்கேற்றப்பட்ட கூத்துக்களில் உள்ள பாடல்கள் இலகுவில் புரிந்து கொள்ள முடியாமல் பெரும் இலக்கண சொற்களையும் அடுக்கு மொழிகளையும் கொண்டு எழுதப்பட்டிருந்தது. அப்பாடல்களின் பொருள்கள் அண்ணாவிமாருக்கோ அந்நாளில் கூத்தை ஆடிய கூத்து கலைஞர்கோ விளங்காத நிலை காணப்பட்டது.
இவ்வாறான பல விடயங்ளை கவனத்தில் எடுத்து பங்குகொள் ஆய்வு செயற்பாட்டின் மூலமாக கூத்தில் அனுபவம் உள்ள அண்ணாவிமார்களுடன் கூத்துக் கலைஞர்களுடனும் கூத்துக்களில் ஈடுபாடு கொண்ட மூத்தோர்களுடனும் பண்டிதர்களுடனும் பெண்ணிலை வாத செயற்பாட்டாளர்களுடனும் தொடர்ச்சியான உரையாடல்களை ஏற்படுத்தி  அதன் மூலமாக கூத்துக்களை மீள் உருவாக்கும் செயற்பாட்டினை திரு. சி.ஜெயசங்கரோடு இணைந்து  சிவநாயகம் ஐயா அவர்களும் கூத்துக்களை மீளுருவாக்கம் செய்தார்.
சிவநாயகம் அண்ணாவியார் கூத்துப்பாடல்களை அமைக்கும் போது பின்வரும் பல விடயங்களை கவனத்தில் கொள்ளுமாறு ஜெயசங்கர் அவர்கள் ஆலோசனையும் வழங்கினார். அதற்கமைய கூத்துக்கள் மீள் உருவாக்கும் செய்யப்பட்டன. மீள் உருவாக்கம் செய்யப்படுகின்ற போது,
 கூத்தின் மரபுக்கேற்ப பாடல்களை அமைத்தல்
 பாத்திரங்களின் குணாம்சங்களுக்கேற்றவாறு பாடல்;ளை அமைத்தல்
 பாடல்களின் கருத்துக்கள் எல்லோருக்கும் இலகுவில் விளங்க வேண்டும்.
 கதையின் தொடர்பாடல்களை கவனத்தில் கொண்டு சபை விருத்தப்பாடல்களை அமைக்க வேண்டும்
 கதையில் வரும் சம்பவங்களுக்கேற்றவாறு சொற்களை பயன்படுத்தி  பாடல்களை  அமைக்க வேண்டும்.
 தாளங்களுடன் சேரும் வகையில் பாடல்களின் மெட்டுக்கள் அமைக்கப்படல்
இவ்வாறான சிந்தனைகளுள் கூத்துப்பாடல்கள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. பின்வரும் கூத்துக்கள் சிவநாயகம் அண்ணாவியாரால் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு எழுதப்பட்டவை.
1. தர்மபுத்திரன் வடமோடிக் கூத்தினை சிம்மாசனப் போர் என்ற வடமோடிக் கூத்தாக மீள் உருவாக்கம் செய்து எழுதியுள்ளார்.
2. வாளவீமன் என்னும் வடமோடிக் கூத்தினை அபிமன்யு இலக்கண வதம் எனும் வடமோடிக் கூத்தாக மீள் உருவாக்கம் செய்து எழுதியுள்ளார்;.
3. இராமஇ இராமண என்ற வடமோடிக் கூத்தை சீதைஇ சூப்பனகை வதை எனும் வடமோடிக் கூத்தாகவும்
4. அல்லி நாடகம் எனும் தென்மோடிக் கூத்தை அல்லியின் எதிர் வாதம் எனும் வடமோடிக் கூத்தாக மீள் உருவாக்கம் செய்தார்.
5. குசஇ லவன் நாடகம் எனும் வடமோடிக் கூத்தை சீதையின் துயரம் எனும் வடமோடிக் கூத்தாக மீள் உருவாக்கம் செய்து எழுதியுள்ளார்.
இவ்வாறான கூத்துக்களை கலந்துரையாடல்கள் ஊடாக எழுதி முடித்தார். இது மட்டுமின்றி  இவ்வாறான கூத்துக்களை எழுதி அனுபவம் பெற்ற சிவநாயகம் அவர்கள் நரகாசூரன் வதை எனும்  வடமோடிக் கூத்தினை தனது தனி முயற்சியில் எழுதி முடித்தார்.
சிறுவர்களுக்கான கூத்தாக மழைப்பழம் எனும் கூத்தினையும் எழுதி முடித்தார். அது மட்டுமின்றி 2004ல் சுனாமி அனர்த்தத்தின் போது மீட்டு செயற்பாடுகளை வைத்து சதிவதனன்  மீட்டு சமூக மேம்பாடு எனும் சமூகக் கூத்தினையும் நரகாசூரனின் வீழ்ச்சி மற்றும் அதிர்வு கண்ட பிரமனன் எனும் வடமோடிக் கூத்தினையும் புலியமாறன், ஆடக சௌந்தரி எனும் வரலாற்றுக் கூத்தினையும் எழுதியுள்ளார். இராமர் சரிதை வனராணி நாடகத்தையும் வனராணி எனும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கூத்தினையும் இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சிறப்பு மிக்க ஆளுமையினை கொண்ட சிவநாயகம் அண்ணாவியார் இன்றும் தனது கூத்து மீள் உருவாக்க பணியினை சிறப்பாக செய்து வருவதுடன் சகுந்தலைக்கு இட்ட சாபம் வடமோடிக் கூத்தினை மீள் உருவாக்கம் செய்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு பழக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தொகுப்பு
பொன். சுரேந்திரன்
கிழக்கு பல்கலைக்கழகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here