சிரேஷ்ர ஊடகவியலாளரான பொன்னுத்தரை சற்சிவானந்தம் தனது 54வது வயதில் காலடி வைக்கிறார்.

0
1709

திருகோணமலை மாவட்டத்தின் பல்துறைகளிலும் சிறந்து விளங்கும் சிரேஷ்ர ஊடகவியலாளரான பொன்னுத்தரை சற்சிவானந்தம் தனது 54வது வயதில் காலடி வைக்கிறார்.
திருகோணமலை இலிங்கநகரை வசிப்பிடமாக கொண்ட இவர் சுமார் 25 வருடங்களாக ஊடகத்துறையில் வலம்வந்தவண்ணமுள்ளார்.
இலங்கையின் தமிழ் தேசிய நாளிதளான வீரகேசரியில் ஊடகப்பணியை தொடர்ந்த இவர் பின்னர் சக்;தி வானொலி,உள்ளிட்ட பல ஊடகங்களிலும் பல சர்வதேச ஊடகங்களிலும் வலம் வந்தவராவார்.தமிழ்தேசிய ஊடக வரலாற்றில் சிறந்து விளங்கி படுகொலை செய்யப்பட்டஊடக ஜம்பவான் சிவராம் போன்றவர்களுடன் நெருங்கிப்பணியாற்றிய இவர்
யுத்த காலத்தில் திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய செய்தி ஊடகங்களின் மூலமாக திகழ்ந்துள்ளார்
இதனால் இவர் சமாதான உடன்பாடுகண்ட காலத்தில் அதாவது கடந்த 2002.06.25இல் மூதூரில் திட்டமிட்ட வகையில் நடந்த கலவரமொன்றில் இலக்கு வைத்து தாக்குதலுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பினார்.
சர்வதேச ஊடகமான பி.பி.சி.தமிழ் வானொலி மற்றும் பி.பி.சிசிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு பேட்டிய அழித்ததன் காரணமாக வைத்து இவர் இலக்குவைக்கப்பட்ட நிலையில் வீட்டில் இவர் இல்லாத நிலையில் இவரது வீடுதாக்கப்பட்டது.
இதனால் இவர் திருகோணமலைக்கு நிரந்தரமாக இடம்பெயரநேர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.பி.பி.சி தமிழ் சேவை உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஊடக பயிற்சி நெறியைமுடித்த இவர்.
ஆன்மீகம் மற்றும் சமூக சேவையிலும் மாவட்டம் கடந்தும் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.ஆன்மீக ரீதியாக நோக்குகையில் கடந்த 1992இலிருந்து பல இந்து நிறுவனங்களின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களில் இவர் முக்கிய இடம்வகிக்கின்றார்
திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர்பேரவையின் துணைப்பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர் அன்னை சாரதா இல்லம் ,இந்து இளைஞர் மன்றம், மற்றும் அறநெறிப்பாட சாலைகள்,போன்றவற்றை தோற்றுவிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்
மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தையும் கடந்து சேவையாற்றும் இளைஞர் அபிவிருத்தியகத்தின் ஸ்தாபகர்களில் இவர் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் இவரது சமூகப்பணி 26 ஆண்டைக்கடந்து நிலைபேறாக சென்ற வண்ணமுள்ளது.இதனால் பல்வேறு இடர்பாடுகளுக்கும் இவர் முகம்கொடுத்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பல்வேறு மட்டப்பணிகளில்,அடிப்படை மனித உரிமைகளைப்பாதுகாப்தில், இவ்வமைப்புக்கள் மூலம் பல பணிகளை ஆற்றிவரும் இவர் சமூகப்பணி வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளார்.
மூதூரில் அடாத்தாக 1996இல்படுகொலை செய்யப்பட்ட கிளிவெட்டி குமாரபுரம் மக்கள் படுகொலை தொடர்பான ஆவண நுலான “ குமுறல் மாறா குருதிமண் குமாரபுரம்” என்ற நுலைத்தொகுத்துவெளியிட்டவராவார்.
அத்துடன் அன்னை சாராத மகிளீர் இல்லமூடாக டாக்டர் பாலசுப்பிரமணியத்தின் “முத்தூர் அகத்தியர்” என்ற நூலை வெளியிட உதவியவருமாவார்.திருகோணமலை மாவட்டத்தில் சமூகப்பணியில் குறிப்பிட்டு பேசப்படும் இவர் பல சந்தர்பங்களில் பொது அமைப்புக்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இன்றும் பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும் செயற்பாட்டாளராகவும் செயற்பட்ட வண்ணமுள்ளார்.
இந்நிலையில் கடந்த 1965.06.20இல்பிறந்த இவர் தற்சமயம் தனது 54வது வயதில் காலடி பதிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here