போரதீவுப்பற்று பிரதேச சபைமூலம் மண்டூர் ஆலயத்திற்கு நாளாந்தம் தங்குதடையின்றி 60,000 லீற்றர் குடிநீர்விநியோகம் வழங்கப்படுகின்றது.

0
445

(க. விஜயரெத்தினம்)
போரதீவுப்பற்று பிரதேச சபைமூலம் மண்டூர் கந்தசாமி ஆலயத்திற்கு நாளாந்தம் 60,000 லீற்றர் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோகநாதன் ரஜனி இன்று வெள்ளிக்கிழமை(24)காலை 10.00 மணியளவில் அலுவலகத்தில் வைத்து தெரிவித்தார்.

மண்டூர் முருகன் ஆலயத்திற்கும்,வெல்லாவெளி பிரதேச பொதுமக்களுக்கும் குடிநீர் விநியோகம் வழங்கப்படுவது பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-

தற்போது நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் குடிநீர் பிரச்சனை பற்றாக்குறை நிலவுகின்றது.இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பிரதேசத்தில் பொதுமக்கள் வாழும் கிராமங்களுக்கும்,பொது அலுவலங்கள்,ஆலயங்கள்,பாடசாலைகள்,மரணவீடுகள்,பொலிஸ் நிலையங்கள்,பொதுமக்களின் விஷேட நிகழ்வுகளுக்கும் தங்குதடையின்றி பிரதேச பவுசர் மூலம் நாளாந்தம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

போரதீவுப்பற்றில் பிரதேச சபைக்குரித்தான 78 நீர்தாங்கிகள் பொதுவிடங்களில் வைக்கப்பட்டும்,கிராம அபிவிருத்தி சங்கங்களுடைய 20 நீர்தாங்கிகளும் வைக்கப்பட்டும் குடிநீர் சிறப்பான முறையில் விநியோகம் செய்யப்படுகின்றது.போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் வரட்சியாக பாதிக்கப்பட்டாலும் பிரதேச சபையின் பவுசர்களையும்,ஆளணியினரையும் பயன்படுத்தி தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்படுகின்றது.இவை தவிர இப்பிரதேசத்தில் 70கிராமங்களுக்கு மேலதிகமாக 70000 லீற்றர் வழங்கப்பட்டு வருகின்றது.மண்டூர் ஆலய வருடாந்த உற்சவகால ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றபோது பிரதேச செயலாளர் அவர்களின் அறிவுறுத்துதல்களுக்கு அமைவாக குடிநீர் விநியோகம் வழங்கப்படுகின்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போரதீவுப்பற்றில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்களை திரட்டியும், அவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும்,அதற்குரிய அனுமதியையும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மண்டூர் ஆலயத்திற்கு சீரான குடிநீர் விநியோகத்தைத்தான் இதுவரையும் போரதீவுப்பற்று பிரதேச சபை வழங்கிவருகின்றது. போரதீவுப்பற்று பிரதேச சபை மண்டூர் ஆலயத்திற்கு குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை என ஆதாரமில்லாமல் செய்தி வெளியிடுவது தவிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here