மிக இளவயதில் அரச இலக்கிய விருது வென்ற தனஞ்சயன்

0
3018

அரச இலக்கிய விருது வழங்கல் விழா – 2018 உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கை கலைக்கழகம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனை குழு ஏற்பாட்டில்.

2018 அரச இலக்கிய விருது வழங்கல் விழா ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன தலமையில் பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் 11.08.2018 இடம்பெற்றது.

இவ்விருது வழங்கல் விழாவில் ஆரையம்பதியைச் சேர்ந்த  கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவன் ரா. தனஞ்சயன் நாடக இலக்கியத்திற்கான தேசிய விருதினை அவரது ‘மானிடப்புயல் ‘ நூலிற்காக பெற்றுக் கொண்டார்.நாடக இலக்கியத்துறையில் மிக இளவயதில் இவ் விருதினை பெறும் முதல் தமிழரும் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் தனஞ்சயன் !

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here