கொக்கட்டிச்சோலையில் பரிசளிப்பு விழா

0
12805

கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று(10) சனிக்கிழமை வித்தியாலய மண்டபத்தில், வித்தியாலயத்தின் அதிபர் கோ.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

2016, 2017ம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்கள், ஆசிரியர்கள், கௌரவிக்கப்பட்டதுடன், வெற்றிப்பதக்கங்கள், சான்றிதழ்கள், நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் பாடசாலையின்; அதிபர், அதிதிகள் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ் கலந்துகொண்டிருந்ததுடன், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்களினால் பல்லூடகமொன்று, பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டமையுடன், சிவஸ்ரீ வ.சோதிலிங்க குருக்களினால் ஒலிசாதனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here