கிழக்கு மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் மனோகரன் ஓய்வு!

0
468
கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னதம்பி மனோகரன் தனது 60ஆவது வயதில் இன்று(3) திங்கட்கிழமை ஓய்வுபெறுகின்றார்.
 
மட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்த அவர் 34வருடகால கல்விச்சேவையிலிருந்து இன்று (3.12.2018)  ஓய்வு பெறுகிறார்.
 
இவர் தனது மொத்த 34வருட அரச கல்விச்சேவையில் 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 15வருடங்கள் ஆசிரியசேவையிலும் அளப்பரிய பணியாற்றியுள்ளார். இயல்பாகவே மென்மையான சுபாவம்கொண்ட திரு.மனோகரன் அனைவருடன் அன்பாகப்பழகும் பண்பைக்கொண்டவர்.
 
இலங்கை கல்வி நிருவாகசேவை தரம் 1 நிருவாகியான திரு மனோகரன் 27.12.1984இல் ஆசிரியராக அரசசேவையில் கால்பதித்தவர். முதல் நியமனம் குருநாகல் நிக்கவரட்டிய வலயத்திலுள்ள பல்பாலன முஸ்லிம் வித்தியாலயத்திலாகும்.
 
1983இல் பேராதனை பல்கலைக்கழகத்தில்  கலைத்துறை பொருளியல் பாடத்தில் விசேடபட்டம் 2ஆம் உயர்நிலையில் பெற்றார். 
அதனால் 16.04.1986 இல் பட்டதாரி ஆசிரியராக அப்போதைய பட்டிருப்புவலய அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் நியமனம்பெற்றார்.
அவரது பொருளியல் விசேடபாட பட்டத்தை பயன்படுத்த எண்ணிய அப்போதைய கல்விப்பணிப்பாளர் கே.தியாகராஜா இவரை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கு 1.2.1987 முதல் இடமாற்றம் செய்தார்.
அதன்படி திரு மனோகரன் சிவானந்தாவில் தொடர்ந்து 12வருடகாலம் உயர்தரத்திற்கு பொருளியல் பாடத்தை எடுத்தார்.
 
அந்தக்காலப்பகுதியில் சிவாநந்தாவிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை சுட்டிக்காட்டமுடியும்.
 
ரு மனோகரன் 04.01.1999.ல் இலங்கை கல்வி நிருவாகசேவை பரீட்சையில் சித்திபெற்று முதலில் பட்டிருப்புவலயத்தில் பிரதிக்கல்விப்பணிப்பாளராக நியமனம்பெற்றார். அங்கு 10வருடங்கள் சிறப்பாக கடமையாற்றினார்.
 
அவரது திறயையையுணர்ந்து அவரை திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் சேவைக்காக 19.08.2010 ல் அழைத்தது.
 
அங்கு அவர் முதல் 3 வருடங்கள் அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும் பின்னர் 01.02.2013 முதல் இன்றுவரை மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றிவந்தார்.
 
இவர் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் விசேட பட்டத்தைப்பெற்று பின்னர் திறந்தபல்கலைக்கழகத்தில் கல்விடிப்ளோமா பட்டப்பின்படிப்பை பூர்த்திசெய்தார். யாழ்பல்கலைக்கழகத்pல் கல்விமுதுமாணி பட்டப்படிப்பைபூர்த்திசெய்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமுகவியலில் முதுகலை மாணி பட்டத்தையும் பெற்றார்.
இவருடையசிறப்பு என்னவெனில் இலங்கை ஆசிரியர் சேவையிலும் இலங்கை கல்விநிருவாகசேவையிலும் முதலாந் தரத்தில் இருப்பது.
அவருடைய பரிபூரண திருப்தி ஆசிரியத்தொழிலில் மட்டுமே இருந்ததாகவும் ஆசிரியர்பணி புரியவே விரும்புவதாகவும் கூறுகிறார்.
தற்போது திறந்தபல்கலைக்கழகம் தேசியகல்விநிறுவகம் மற்றும் புளுஸ்கை கெம்பஸ் பொன்ற நிறுவனங்களில் கல்வித்தறை பகுதிநேரவிரிவுiராயளராக சேவையாற்றிவருகிறார்.
 
இவரது துணைவியார் திருமதி திலகவதி மனோகரன் மட்டு.வலயத்தில் சமயபாட ஆசிரியஆலோசகராக கடமையாற்றுகிறார். ஒரேயொருமகன் இலங்கைவங்கியில் பணியாற்றுகிறார்.
 
இவர் ஓய்வுபெறும் இவ்வேளையில் அவராற்றிய அர்ப்பணிப்பான சேவைக்காக கல்விச்சமுகம் பாராட்டுகிறது.
 
வி.ரி.சகாதேவராஜா காரைதீவு  நிருபர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here