அகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்.

0
839

(வெல்லாவெளிநிருபர்-க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியழகன் அகில இலங்கை சமாதான நீதவானாக மட்க்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஆறுமுகம் – பகவதி தம்பதியினரின் மகனான இவர்,பேராதனைப்பல்கலைக்கழக பட்டதாரியாவார். தனது ஆரம்பக் கல்வியை துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும், வந்தாறுமூலை மகாவித்தியாலயம், மட்ட சிவானந்தா தேசியப்பாடசாலை, கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் கற்றார்.

தனது ஆசிரியக் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் ஆரம்பித்து நீண்டகாலம் பணியாற்றி தற்போது மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசியப்பாடசாலையில் தொடர்ந்து வருகிறார்.

பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினராகும், பாடசாலை ஒழுக்கக் கட்டுப்பாட்டு உறுப்பினராகவும், சமூக அபிவிருத்தி அமைப்பின் செயலாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
கல்விச் சேவை யோடு, சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்டபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here