முனைக்காடு கிராமத்தில் போதை ஒழிப்பு

0
166

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் போதை ஒழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

கூடுதலாக கசிப்பு உற்பத்தி செய்யப்படும் முனைக்காடு கிராமத்தில் இருந்து மக்களை விழிப்படையச் செய்து கிராமத்தில் போதையினை ஒழிக்கும் நோக்குடன் பல்வேறு செயற்றிட்டங்கள் அக்கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாகவே எதிர்கால சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

இவ்விழிப்புணர்வு செயற்பாட்டில்  ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர் குழாமினர், பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்,  சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here