ஜனாதிபதி வருகையால் உச்சக்கட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

0
615

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் 12ம் திகதி ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

ஒன்றிணைந்த அபிவிருத்தி என்ற தொனியில் தெரிவு செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தீர்க்ப்படாத பிரச்சினைகளை தீர்த்தல் பொருட்டு சகல துறைகள் சார்ந்தும் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெறுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது .

கடந்த 8ம் திகதி தொடக்கம் இடம்பெறும் இத்திட்டத்தின் பயனாக நேற்றைய தினம் (10) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பல சேவைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன

1.சிறுவர் உரிமைகளை பாதுகாத்தலுக்கான பாதாதைகள் வழங்கலும், வீதியோரங்களில் பாதாதைகள் திறந்து வைத்தனர்

2.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வாகன உடமை மாற்றம், ஆண்டு வருமானப்பத்திரம் தொடர்பான நடமாடும் சேவை.

3. குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு4. அக்ரஹரா நிறுவன சேவை தொடர்பில் விழிப்பூட்டல்.

5. சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் விழிப்பூட்டும் வீதியோர பதாதைகள் திறந்து வைப்பு

6. இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு பயிற்சியளித்தல் .

7. சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை Smart srilanka திட்டத்தில் சந்தைப்படுத்த ஊக்குவித்தல்.

8. பாலர்பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு விழிப்பூட்டல்.

இவ்வேலைத்திட்டங்களில் ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமூக சேவை உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here