வாராந்த சந்தை நடைபெறாது. பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை

0
537

வாரந்த சந்தை நடாத்துவதை தவிர்த்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் பொது நிகழ்வுகளை தவிர்ப்பது எனவும், பொது இடங்கள், சேவை நிலையங்கள், பிரதான கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரச திணைக்களங்களின் தலைவர்கள்,காவல்துறை பொறுப்பதிகாரி, ஆலய தலைவர்கள என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here