சாந்தமருதில் ஐவர் பலி! பலர் காயம்.

(எருவில் துசி) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0
594

(எருவில் துசி) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கும். குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்கொலை குண்டுகள் தயாரிக்கும் நிலையம் ஒன்று உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர்.
அங்கு சென்று சோதனையிட்ட போது. குழுவொன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு பெண்கள் ஊயிரிழந்ததாகவும் அதில் ஒரு பெண் விதியில் வைத்து சுடப்பட்டடுள்ளதாகவும் அறியமுடிகின்றது. வீதியில் சென்ற ஆட்டோவினை மறித்த போது நிற்காமல் சென்ற காரணத்தினால் சுட்ட போது இந்த உயிர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றது. உடலங்கள் சாந்தமருது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,குறித்த மோதலின் போது படைத்தரப்புக்கும் பாதிப்புக்கள் ஏற்படடிருக்க வாய்புள்ளதாகவும், ஊரடங்க உத்தரவு அமுலில் உள்ள காரணத்தினால் பிரதேசம் அமைதியாக  காணப்படுவதுடன் தற்போது படையினரில் பூரண கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here