சாய்ந்தமருதில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

(Eruvil Thiusi) அம்பாறை - சாய்ந்தமருது பிரதேசத்தில்  15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

0
1511

(Eruvil Thiusi) அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தில்  15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து மேற்கொண்ட தேடுதலில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் 6 ஆண்களும் 6 சிறுவர்களும் மேலும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை குறித்த வீட்டில் பெண் ஒருவரும் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் உள்ளிட்ட மூவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் தேடுதலை மேற்கொண்ட பின் 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here