சங்காபிஷேகத்தில் சஞ்சரித்த கண்ணகி.

இன்று (04.05.2019) காலை அம்பாளை சங்காபிஷேசம் செய்து மக்களுக்கு அருள் கிடைக்க பிராத்தனைகள் செய்யப்பட்டது அந்தவகையில் 1008 சங்குகள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது.

0
229

கிழக்கில் கண்ணகி சடங்குகள் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ளநிலையில் எருவில் கண்ணகியம்பாள் ஆலயத்தின் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் 09 மாத காலத்தில் புதிதாக ஆலயம் அமைக்கப்பட்டு கடந்த 18.04.2019 கும்பாபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு 21ந்திகதி பால்காப்பு அம்பாளுக்கு வைக்கப்பட்டு 22ந் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து மண்டாலாபிஷேக பூசைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று (04.05.2019) காலை அம்பாளை சங்காபிஷேசம் செய்து மக்களுக்கு அருள் கிடைக்க பிராத்தனைகள் செய்யப்பட்டது அந்தவகையில் 1008 சங்குகள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. இன் நிகழ்வில் பக்தர்கள் பலர்
கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கும்பாபிஷேக நிகழ்வுகளை அகோரதேசிகர் இரா.கு.கோபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வுகளை சிறந்த முறையில் ஆலய அறங்காவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here