எருவில் கிராமத்தில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு.

0
98

கம்பரெலியதிட்டத்தினூடாக சோ .கணேசமூர்த்தி அவர்கள் எருவில் வடக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு  உட்பட்ட கொக்கு கேணி வீதிஇ மற்றும் கொக்குக்கேணி விவசாய வீதி ஆகிய  இரண்டு வீதிகளை கொங்கிறிட் வீதிகளாக அமைக்கும் பொருட்டு நாற்பது இலட்சம் ரூபாவும்

எருவில் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா மற்றும் புளியடி பிள்ளையார் ஆலயத்திற்கு ஐந்த  இலட்சம் ரூபாவுமாக ஐம்பத இலட்சம் ரூபாவுக்கான புணார்த்தான வேலைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் இ திருமதி சி.வில்வரெத்தினம், அபிவிருத்தி உத்தியோகஸ்தர். கிராம சேவை உத்தியோகஸ்தர். எருவில் வட்டார (ஐ. தே.க ) பிரதேச
சபை உறுப்பினர் வினோதினி மற்றும் ஆலய நிருவாகிகள். கிராம அபிவிருத்தி சங்கம்இ மற்றும் கிராம பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு
இந் நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்