கோப்பிகுல கலியாண திருச்சடங்கில் காட்சியளித்த கண்ணகி.

(Eruvil Thusi) வைகாசி திங்களில் வருவேன் என்ற கண்ணகிக்கு இந்து பக்தர்கள் விழா எடுக்கும் காலத்தில் பூரணையினை திங்களாக கருதி சில ஆலயங்களில் திருக்குளிர்த்தில் ஆடி முடிவுற்றுள்ள நிலையில்

0
503

(Eruvil Thusi) வைகாசி திங்களில் வருவேன் என்ற கண்ணகிக்கு இந்து பக்தர்கள் விழா எடுக்கும் காலத்தில் பூரணையினை திங்களாக கருதி சில ஆலயங்களில் திருக்குளிர்த்தில் ஆடி முடிவுற்றுள்ள நிலையில் மேலும் பல ஆலயங்கள் திங்கள் கிழமை திருக்குளித்தில் காணவுள்ள நிலையில் எருவில் கண்ணகி அம்பாள் ஆலயத்தில் கோப்பிகுல மக்களினால் கலியான திருச்சடங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை கலியாண கால் வெட்டப்பட்டு பக்கிபூர்வமாக தோல்களில் சுமந்து வந்து இரவு இரவாக அலங்காரம் செய்து காலை திருமணச்சடங்கு நடைபெற்றது. ஆலய நிருவாக சபையினர் புடைசூள தமிழ் பாரம்பரிய முறைப்படி ஒரு திருமணம் எவ்வாறு நடக்க வேண்டும் அதற்கேற்ற வகையில் அனைத்து விடயங்களும்
மேற்கொள்ளப்பட்டு பல ஆயிரம் பக்தர்கள் மத்தியில் சடங்கு நடைபெற்றது. கலியாண மண்டபத்தில் கண்ணகி அலங்கரிக்கப்பட்டு வண்ணக்கரினால் அம்பாளுக்கு தாலி கட்டப்பட்டது. நாளை மாலை வட்டுக்குத்து பூசை நடைபெற்று திங்கள் அதிகாலை திருக்குளித்தில் ஆடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here