போரில் குற்றம் நடைபெறவில்லை.  எதிர்கட்சி தலைவர் 

பல உயிரிழப்புக்களுடன் வெற்றிக் கொண்ட பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் நாம் பிறிதொரு அடிப்படைவாத தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

0
415

இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை என்று 10 வருட கால வெற்றியினை கொண்டாடும் இத்தருணத்தில் தைரியமாக குறிப்பிட முடியும் என திர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முப்படையினரின் சேவையினாலேயே நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு இராணுவத்தை நாம் முதலில் எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இனியாவது பெருமைப்படுத்த அரசாங்கம் பழகிக் கொள்ள வேண்டும்.

பல உயிரிழப்புக்களுடன் வெற்றிக் கொண்ட பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் நாம் பிறிதொரு அடிப்படைவாத தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. சர்வதேசத்துடன் தொடர்புடைய தேசிய தீவிரவாதத்தின் தாக்குதலே அண்மையில் இடம்பெற்றது. 2008ஆம் ஆண்டு மும்பை நகரில் குண்டு தாக்குதல் நடத்தியது இந்நிய பிரஜை அல்ல ஆனால் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை நடத்தியவர்கள் இலங்கை பிரஜைகள் என்பது ஒரு கட்டத்தில் வருந்தத்தக்கது.

விடுதலை புலிகளினால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலினால் கொல்லப்பட்ட உயிர்களை விட அதிகமான உயிரிழப்புக்கள் ஒரு தற்கொலை குண்டுதாரியினால் சம்பவிக்கப்பட்டது. தொடர்ந்து அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் பழி சொல்லுக்கும் உள்ளாகிய இராணுவமே இன்று இந்த நாட்டை பாதுகாத்துள்ளது. அனைத்து மக்களும் இராணுவத்தினரை போற்றி மதிக்க வேண்டும் நிலையில் நாம் அனைவரும் இன்று உள்ளோம்.

இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை என்று 10 வருட கால வெற்றியினை கொண்டாடும் இத்தருணத்தில் தைரியமாக குறிப்பிட முடியும். யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

நாட்டுக்காக போராடிய இராணுவத்தினர் தொடர்ந்தும் மதிக்கப்பட வேண்டும். அரசியல் கொள்கைகள் மாற்றமடையும் போது இராணுவத்தினரை ஒருபோதும் வேறுப்படுத்தி அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள கூடாது. இராணுவத்தினரது தேவையினை தற்போதே அரசாங்கம் முழுமையாக புரிந்துள்ளது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here