அமைச்சர் ரிஷாட் பதிதீனுக்கு தூக்கு தண்டனை.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்வது மாத்திரமல்லாமல் தூக்கிலிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0
159

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைது செய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் ரிஷாத் பதியுதீன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நிரூபித்துக்கொள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்வது மாத்திரமல்லாமல் தூக்கிலிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கான முழு ஒத்துழைப்பையும் பாராளுமன்றத்தினூடாக பெற்றுக்கொடுப்போம்.

பயங்கரவாதிகளுக்கு பாராளுமன்றத்தில் அடைக்கலம் கொடுக்க முடியாது. குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு கிடையாது எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here