கண்ணகி ‘பேழை’ வெளியீட்டு விழா.

0
601

கிராமத்தின் வரலாற்றினையும் இந்து மத பண்பாட்டில் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பான பல்வேறுபட்ட கோணத்தில் தொகுக்கப்பட்ட ‘பேழை’ சிறப்ப மலர் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையில் வரலாறு காணhத வகையில் 09 மாத காலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட எருவில் கண்ணகி அம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இம்மாதம் நடைபெற்று சடங்குகள் முடிந்த பின்பு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளியீடப்பட்ட சிறப்பு மலர் ‘பேழை’ பல சமய சிந்தனைகளையும், எருவில் கிராமத்தின் தொன்மைகளையும் கிராமம் சார்ந்த வரலாற்று பதிவுகளையும் தன்னத்தே கொண்டு வெளியிடப்பட்டது. வாசகர்களை கவரக்கூடிய வகையில் ஆக்கங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வினை கண்ணகியம்பாள் ஆலய பரிபாலன சபை தலைவர் மா.சுந்தரலிங்கம் தலைமைதாங்க ஏனைய செயலாளர், வண்ணக்கர்,மணியகாரன், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர். நூலுக்கான நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழக நுன் கலை பீட சிரேஸ்ட விரிவுரையாளர் க.மேகனதாஸ் அவர்களினால் மேற்கொளப்பட்டது. அறிமுகவுரையினை சா.பரமானந்தம் அவர்களினால் உரையாற்றப்பட்டது.

நிகழ்வுகள் அனைத்தும் மலராசிரியர் ச.ரகுபதி அவர்களினால் தொகுத்து நடத்தப்பட்டது. நூலின் முதல் பிரதியினை அகோர தேசிகர் இரா.கு.கோபாலசிங்கம் பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here