கற்றல்வள நிலையம் திறப்பு

0
431

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலையத்தினை இன்று(10) செவ்வாய்க்கிழமை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி திறந்து வைத்தார்.

கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலைய கட்டிடமே திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச இணைத்தலைவர் சோ.கணேசமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் சோ.சுரநுதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here