இளைஞர்களுக்கான தொழில் சேவை மத்திய நிலையம் திறப்பு.

(எருவில் துசி) போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினை இலகுபடுத்தம் நோக்கில் திறந்து வைக்கப்பட்டது.

0
182

 

(எருவில் துசி) போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினை இலகுபடுத்தம் நோக்கில் திறந்து வைக்கப்பட்டது.

அதாவது மாபெரும் தொழில் சந்தையினை ஏற்படுத்தும் முகமாக வேலை தேடுபவர்களை பதிதல், தொழில் பயிற்சிகளுக்கு இணைத்தல், தொழில் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்குதல் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் இதற்கான வசதிகளை மனிதவள வேலைவாய்ப்ப திணைக்களம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு ஆகியவை ஊடாக அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கு விரண்டினா அமைப்பு அணுசரனை வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் உதவி பிரதேச பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சசிகரன் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்க. பகிரதன் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி;திவாகரன் ஆகியோரின் பங்கபற்றுதலுடன் நடைபெற்றது விரண்டினா அமைப்பின் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here