கட்டாக்காலி மாடுகள் அடைப்பு. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை நடவடிக்கை

0
29

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினரால் கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டன.

கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் தினமும் இரவு நேரத்தில் கால்நடைகள் நிறைந்து காணப்படுகின்றமையினை கருத்தில் கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டே இவ்வாறு கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கதக்கது. எனினும் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்த கால்நடை உரிமையாளர்கள் சட்டத்திற்கு கட்டுப்படாமல் தமது கால்நடைகளை பெற்றுள்ளதுடன் பிரதேச சபை உத்தியோகத்தர்களுடன் முரன்பட்டுள்ளனர். இதனால் மேற்கொண்டு உரிய கால்நடை உரிமையாளர்களுக்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here