அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றுகூடல்.

அரச திணைக்களங்களில் கிடைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் சேவைகள் தொடர்பான திருப்தியீனங்கள் தொடர்பாக உரியவர்களை நாடி தீர்வுகளை எட்டும் முகமாக தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

0
336

அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று தங்களது தொழில் ரீதியான விடயங்களை அடிப்படையாக வைத்து செயற்பட்டுவரும் தமது
சங்கத்தினை பலப்படுத்தியதோடு பல தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.

அரச திணைக்களங்களில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நலன் கருத்தியும் அவர்களின் செயற்பாடுகளுக்கு அரச திணைக்களங்களில்
கிடைக்கும் வாய்ப்புக்கள் மற்றும் சேவைகள் தொடர்பான திருப்தியீனங்கள் தொடர்பாக உரியவர்களை நாடி தீர்வுகளை எட்டும் முகமாக தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

இக் கூட்டத்தில் தமக்கான புதிய நிருவாகத்தினையும் கட்மைத்தனர் அந்த வகையில் பொதுச் செயலாலராக சீ.லவகுமார் தலைவராக வசந்தராசா, பொருளாலர் சபேசன்,
அமைப்பாளராக செந்தில்நாதன், பிரச்சார செயலாளர் திருமாறன், உப தலைவர்கள் எம்.எல்.எம்.மன்சூர், உப செயலாளர்கள் அன்ரனி திருவருள் மற்றும் ஊடக இணைப்பாளராக
சு.துசியந்தன் ஆகியோர் பதவிவழி உறுப்பினர்களாகவும் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களாக 23 பேரும் நியமிக்கப்பட்டனர்.

இக் கூட்டத்தின் போது கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

01.சேவை பிரமான குறிப்பை திருத்துதல்.
02.கடமை பட்டியலை அனைத்து திணைக்களங்களும் நடைமுறைப்படுத்த தூண்டுதல்.
03.சம்பள முரண்பாட்டை தீர்த்தல். போன்றதீர்மாணங்கள் முதல் தடவையாக எட்டப்பட்டது.

மற்றும் இவ்வருடத்திற்கான வருட இறுதி ஒன்று கூடலினை டிசம்பர் மாதம் ஏழாம்(07) திகதி நடத்துதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பல திணைக்களம் சார்ந்த
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here