இன்றைய இளையவர் நாளைய முதியவர் (மட் மாவட்ட மேலதிக அரச அதிபர்)

0
396

சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்கி ஆழமான ஆலோசனைகள் வழங்கி நாட்டின் உயர்ச்சிக்கு பங்காற்றி உண்ணத புருசர்களாக மிளிரும் முதியோர்
உடலாள்
முதிர்வுற்றாலும் அறிவால், அனுபவத்தால், ஆற்றலால் சிறந்தவர்களை போற்றுகின்ற நிகழ்வு போரதீவு பற்று பிரதேச செயலகத்தில் இன்று(10) சிறப்பாக பிரதேச
செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேசத்தில் சிறந்து விளங்கும் முதியோர்களையும் மற்றும் சமூகத்திற்கு நற்பணியாற்றும் முதிர்ச்சியான மனிதர்களை சமூக கண்ணுக்கு வெளிக்கொணரத்தக்க வகையில்
கௌரவிக்கப்பட்டனர். முதியோர் சார்ந்த கலை நிகழ்வுகள் மற்றும் சிறுவர்களின் படைப்புக்கள் என்பன மேடையோற்றப்பட்டது. வெல்லாவெளி கலாசார மண்டபத்தில்
நிகழ்வுகள் முற்றுப்பெற வெல்லாவெளியில் முதியோருக்கான பொழுது போக்கு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட மட் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துரைக்கையில் வெல்லாவெளி பிரதேசத்தில் பிரதேச செயலாளருடன் இணைந்த
முதியோர்கள் பல பாரமபரிய தழிழர் கலை படைப்புக்களை படைப்பது பாரட்டுக்குரியது எனவும். இன்று நாம் இளையவர் நாளை முதியவர் என்பதை கருத்தில்
கொண்டு இன்றைய முதியவரை பாதுகாக்க வேண்டும் விதைப்பது தான் முளைக்கும் என்பதற்கு அமைய அவரது கருத்து காணப்பட்டது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனோந்திரன், கணக்காளர் நாகேஸ்வரான், நிருவாக உத்தியோகத்தர் உமாபதி மற்றும் பிபிடிஆர்ஓ இணைப்பாளர் மேலும் பல
உத்தியோகத்தர்கள் முதியோர்கள் பொது மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here