முகத்துவாரம் வெட்டினால் நிலக்கீழ் நீர் குறைந்து குடிநீர் குறையும்.

0
594

முகத்துவாரம் வெட்டினால் நிலக்கீழ் நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் கிராம மட்ட அமைப்புக்கள், பாடசாலை அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் சார்பில் ஒருவர் தற்போது பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக கரையோரங்களில் உள்ள தமது விவசாய செய்கை நீரில் மூழ்கியுள்ளதனால் முகத்துவாரம் வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்ட போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறுகையில் விவசாயிகளாகிய நீங்கள் கரையோரங்களில் உள்ள காணிகளில் நெற்செய்கைக்கு தீர்மானங்களை மேற்கொண்டீர்கள். ஒவ்வொரு வருடமும் மழை வரும் என்பது சகலரும் அறிவோம். ஆற்றுவெள்ளம் நிரம்பி நிலத்தடிநீர் நிரம்பினால் தான் நிலங்கள் உவராவதும், குடிநீர் குறைபாடும் தீரும். இதற்காக ஓரிரு வாரங்கள் நீர் தேங்குதல் வேண்டும் எனக்குறிப்பிட்டார். இதன்போது  மீன், இறால் பெருக்கங்கள் பற்றியும் கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த பதவிநிலை உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here