மட்டு. மேற்கில் ஞாயிறு தோறும் அறநெறிப்பாடசாலை செயற்றிட்டம்.

0
239

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 67 பாடசாலைகளில் இன்று(24) ஞாயிற்றுக்கிழமை ஞாயிறு தோறும் அறநெறிப்பாடசாலை செயற்றிட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை மையமாக கொண்டு இயங்குகின்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அறநெறிப்பாடசாலைகளை வலுவூட்டும் நோக்கத்துடனும், அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாத இடங்களில் அறநெறிப்பாடசாலைகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடனும் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரனின் வழிகாட்டலின் கீழ், அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபகர் அலையப்போடி நல்லரெத்தினம் அவர்களின் நிதியுதவியுடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில், இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை அதிபர் ஆ.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய குரு சிவஸ்ரீ ப.மானாகப்போடி குருக்கள், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன், வித்தியாலய அதிபர் மா.சத்தியநாயகம், அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் தலைவர் சி.தவநீதன், அமைப்புக்களின் பிரதிநிதிகள், வித்தியாலய ஆசிரியர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அறநெறிப்பாடசாலைக்கு சமுகம் கொடுத்திருந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here