மாணவர்களின் கற்றல் தடைப்படாமல் இருக்க சூரியக்கல மின்குமிழ் வழங்கி வைப்பு

0
261

படுவான்கரை பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் தடைப்படாமல் இருக்க சூரியக்கல மின்குமிழ் வழங்கப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள தாந்தாமலை, பனிச்சையடிமுன்மாரி, மாவடிமுன்மாரி, குளுவினமடு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடு தடைப்படாமல் இருக்கும் வகையில் உலக தரிசனம் (World vision)  நிறுவன அனுசரணையில் நேற்றைய தினம் (20:12:2019)  சூரியக்கல மின்குமிழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச உலக தரிசனம் நிறுவன முகாமையாளர் மைக்கல்,  பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here