கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இருவர் கல்வி நிருவாக சேவை 1க்கு தெரிவு

0
921

கல்வி நிருவாக சேவை தரம் 1 ற்கு  தகுதி பெற்றுள்ள அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் இணைய தளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

24.12.2019ம் திகதி அரச சேவை ஆணைக்குழுவின்  உத்தரவிற்கு அமைய,  கல்வி நிருவாக சேவை தரம் II இல் இருந்து தரம் 1ற்கு பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தரம் 1ற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம். ஏ.விமலசேன,  மட்டக்களப்பு பிரதிக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் ஆகியோர் இத்தகுதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here