சட்ட வைத்திய அதிகாரி மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நியமனம்.

0
337

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியக் கலாநிதி ஏ.இளங்கோவன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றி வரும் நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அ​மைந்த இந்த நியமனத்தின் பொருட்டு, வைத்தியர் இளங்கோவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் இல்லாத நிலையில், சட்ட வைத்திய உடற் கூறாய்வுப்  பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பில் இருந்து சடலங்களை, திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலையிருந்து வந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தரமானதாக சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவேண்டியதன் அவசியத்தை மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here