பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

0
297

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தனின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here