முனைப்பு நிறுவனத்தினால் சேலைகள், பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
299

வறுமைக்குட்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு முனைப்பு நிறுவனத்தால் சேலைகள், பாடசாலை உபகரணம் வழங்கப்பட்டது.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான முனைப்பு நிறுவனத்தின் இரண்டாம் கட்ட பயணமாக நேற்று (09) மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கதிரவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் சேலைகளும் அணியும், வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கு சேலைகளும், அதே போன்று போக்குவரத்து, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி காட்டுப்பகுதியில் பிரதான வீதியிலிருந்து சுமார் 23KM தூரத்தில் அமைந்துள்ள கட்டுமுறிவு குளம் கிராமத்து பாடசாலையின் 176 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும், மாணவர் தலைவர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது.

இதன்போது முனைப்பு சுவிஸ் தலைவர் மா.குமாரசாமி, உறுப்பினர் சந்திரகுமார், இலங்கை முனைப்பு நிறுவன பொருளாளர் தயானந்தரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here