கஞ்சாவுடன் ஒருவர் கைது. காத்தான்குடியில் சம்பவம்.

0
267

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 01 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (02) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவல் துறையினர் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையினர் கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வேண்டுவதாக மாறு வேடம் பூண்டு சம்பவதினமான இன்று மாலை 6 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் வியாபாரி கஞ்சாவுடன் வந்திருந்தபோது விசேட அதிரடிப்படையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்துள்ளனர்  அவரிடம் இருந்து 01 கிலோ 250 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் பொலநறுவை தறப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here