படுவான் சம்பியன் லீக் 2020 ஆரம்பம்.

0
43

படுவான் சம்பியன் லீக் பருவம் (Season) 03 இன்று (08) ஆரம்பமானது.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் கடந்த 2018 ம் ஆண்டு மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு பிரதேச விளையாட்டுக் கழகங்களை ஒன்றித்து ஆரம்பித்த படுவான் சம்பியன் லீக்  உதைபந்தாட்ட போட்டியில் பருவம் (Season)  03 ற்கான 01வது போட்டி குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

கழக தலைவர் பி.நீதிதேவன் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ்வாண்டுக்கான படுவான் சம்பியன் லீக்கின் 1வது போட்டி கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணிக்கும், விளாவட்டவான் ராஜா அணிக்கும் இடம்பெற்றது. கடந்த ஆண்டு  கிராமங்களில் நடைபெற்ற உறவுகள் ஞாபகார்த்த போட்டிகளில் 1ம் இடங்களை பெற்ற அணிகள் 07 பங்குபற்றுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here