உணர்வால் இணைந்து நாமெழுவோம் – சி.ஜெயசங்கர்.

0
412

உணர்வால் இணைந்து நாமெழுவோம்
ஒருபொழுது உடலால் தனித்திருப்போம்.
ஒவ்வொருகணமும்   உணர்வால் இணைந்தெழுவோம்
மனிதம்  எங்கும்   தளைத்து ஓங்கிட,
ஒவ்வொரு பொழி நிலமும்
ஒவ்வொரு துளி நீரும்
கலந்து, மகிந்து, நெகிழ்ந்திட
விதைப்போம்! நடுவோம்! விளைவு செய்வோம் !
பசியும்  பிணியும்  அற்று
பல்லுயிரும் மகிழ்ந்து கொண்டாடும் ;,
உலகம் எமதென எமதென,
உணர்வால் இணைந்து நாம் எழுவோம் !.
ஒருபொழுது உடலால் தனித்திருப்போம்.
ஒவ்வொருகணமும் உணர்வால் இணைந்தெழுவோம் .
மனிதம்  ; எங்கும் எங்கெங்கும் தளைத்து ஓங்கிட,
உணர்வால் இணைந்து நாம் எழுவோம் !
உலகம் எமதென எமதென,
உணர்வால் இணைந்து நாம் எழுவோம்!

சி.ஜெயசங்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here